குஷியில் தனுஷ் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவை தாண்டி இந்தி, ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நேரடியாக ‘வாத்தி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கு நடுவில் தனுஷின் குடும்ப வாழ்க்கை உடைந்து போன பிறகும் பிரேக் எடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியானது. இதனால் தொடர்ந்தது பலப்படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியானாலும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்று வருத்தத்தில் இருந்தனர்.
தற்போது ‘நானே வருவேன்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு டுவிட்டரில், அசுரன், கர்ணன் வரிசையில் ‘நானே வருவேன்’ நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில் …தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில் என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தனுஷின் ‘நானே வருவேன்’ திரையரங்குகளில் வெளியாகும் என்று உற்சாகத்தில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.