தீபிகா படுகோனுடம் மோதும் கங்கனா!

இந்தியில் புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் கங்கனா ரானவத் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் படத்திலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இந்தியில் பிரபலமாக இருக்கும் தீபிகா படுகோனே தமிழில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்திருக்கிறார். இருவரும் இந்தியில் முன்னணி கதாநாயகிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் கெஹ்ரையான் என்ற இந்தி படத்தில் தீபிகா படுகோனே முத்தக்காட்சியில் நடித்து இருகிறார். இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது. முத்தக்காட்சியில் நடிக்க கணவர் ரன்வீர் சிங்கிடம் அனுமதி வாங்கினீர்கள் என்று தீபிகாவிடம் கேட்டபோது, முட்டாள்தனமான கேள்வி என்று சாடினார். சகோதரியின் காதலனை கள்ளத்தனமாக காதலிக்கும் பெண்ணாக தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.
இந்த படத்தை குப்பை என்று சாடியுள்ளார நடிகை கங்கனா ரணாவத். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், மில்லினியம், நவீன திரைப்படங்கள் என்ற பெயரை தயவு செய்து குப்பைகளை வியாபாரம் செய்யவேண்டாம். தரமில்லாத திரைப்படங்கள் எப்போதும் தரமற்றவை தான். ஆபாச காட்சிகளை வைத்தாலும் அந்த படங்களை காப்பாற்ற முடியாது. இது அடிப்படையான உண்மை என்று கூறியு தீபிகா படுகோனுடன் சாடியுள்ளார். கங்கனா ஏற்கனவே பல தடவை கங்கனா விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.