இயக்குனர் செல்வராகவனின் பிஸ்ட லுக்கா இது?

டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. அனிருத் இசையமைக்க சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி , காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்குகிறார்.
தற்போது முதல் முதலில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிப்பு பயணத்தை துவங்கி உள்ளார். செல்வராகவன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவு செய்வது வழக்கம். தற்போது இவர், இவரின் புது லுக் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் செல்வராகவனின் பீஸ்ட் படத்தின் லுக் இதுதான் என்று கூறி வருகின்றார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.