சாதனை படைத்த தளபதியின் ‘அரபிக் குத்து’ பாடல்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து முடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரு நாய்க்கர் கூட்டமே நடித்து முடித்துள்ளது. யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்ற அப்டேட்டை வெளியிட்டிருந்தனர்.

அவர்கள் அறிவித்தபடியே காதலர் தினத்தன்று #ArabicKuthu பாடலை வெளியிட்டிருந்தனர். இந்த பாடலின் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். நேற்று வெளியான இந்த பாடல் சமூக வலைத்தளங்களை நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பாடலில் தளபதி ஆடும் நடனம் வழக்கத்தைவிட மாஸாக இருந்தது. ஆனால் பலருக்கு பாடலின் வரிகள் புரிவில்லை என்றாலும் தளபதி பாடல் பல இடங்களில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் அரபிக் குத்து பாடல் யூடியூபில் 14 மணி நேரத்தில் 1.7 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் வாட்ஸாப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரபிக்குத்து பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…