பிரபல நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

டெல்லி செங்கோட்டை அருகே விவசாயிகள் நடத்திய பேரணியில் வெடித்த கலவரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபி நடிகரான தீப் சிங் சித்து இன்று 9 மணியளவில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியின் குண்ட்லி – மனேசர் – பல்வால் பகுதிகளை இணைக்கும் கேஎம்பி எக்ஸ்பிரஸ் சாலையில் செல்லும்போது இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சித்து பயணித்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

நாட்டையே உலுக்கிய டெல்லி செங்கோட்டை விவசாயிகள் போராட்டத்தை சித்து முன்னின்று நிறுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. டெல்லி விவசாயிகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகரில் மாதக்கணக்கில் பனி மற்றும் வெயிலில் போராட்டம் நடத்தினர். டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது திடீரென கலவரம் வெடித்தது. அப்போது டெல்லி செங்கோட்டையில் அத்துமீறி கொடி ஒன்றும் ஏற்றப்பட்டது. அப்போது பஞ்சாபி நடிகரான தீப் சிங் சித்து என்பவர்தான் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருசில விவசாயிகள் தூண்டி ஊர்வலத்தில் கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சித்து செங்கோட்டையை நோக்கி போராட்டக்காரர்களை வழிநடத்தியதாகவும், கலவரத்தின் போது அதன் உச்சியில் அத்துமீறி கொடியையும் ஏற்றி வீடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமினில் வெளிவந்த நிலையில், இன்று அவர் கார் விபத்தில் பலியானதாக வெளியாகியுள்ள சம்பவம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

நைஜீரியாவில் 31 பேர் பலி..!! கிறிஸ்தவ தேவாலயத்தில் உணவிற்க்காக ஏற்பட்ட கூட்ட நெரிசல்..!     

திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் நெரிசல் ஏற்படுவதும் அந்த கூட்ட நெரிசலில்…