ஆங்கில படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி!

இசை உலககின் உச்சத்தில் இருக்கும் இளையராஜா அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து தற்போது இசை ஞானியாக உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்து புதிதாக ஒரு ஆங்கில படதிற்கு இசையமைக்க உள்ளார். இது இளையராஜா இசையமைக்கும் ஆயிரத்து 422-வது படமாகும். இந்த படத்தை இங்கிலாந்தில் உள்ள பிரபல நிறுவனம் தயாரிக்கிறது.
இளையராஜா இசையமைக்கும் இந்திய படத்திற்கு ‘எ பியுடிபுல் பிரேக் அப்’ என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் காதல் ஜோடி இங்கு சில நாட்கள் சேர்ந்து வாழ்ந்து பிறிந்துவிட முடிவு செய்கின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பேய்களால் சில பிரச்சனைகள் வருகிறது.
அவர்கள் சேர்ந்தே இருந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்ற கதையம்சத்தில் தயாராகிறது. இந்த படத்தை அஜித் வாசன் உஜ்ஜினா இயக்குகிறார். கிரிஷ், மடில்டா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ஒரு திகில் திரைப்படமாக உருவாக உள்ளது.