நயன்தாராவின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையா வளம் வந்து அப்போது தென்னிந்தியாவின் முக்கிய கதாநாயகியாக மட்டும் இல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாராகம் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 வருடங்களாக காதலித்து வருகிறார். விரைவில் திருமணமும் செய்துகொள்ள இருக்கிறார்கள். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா , கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

தற்போது இவர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் காத்துவாகுல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். கதாநாயகனாக விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகியாக சமந்தா நயன்தாரா நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தற்போது நயன்தாராவின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. நயன்தாரா தொடர்ந்து 3-வது முறையாக மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்க்கு முன்பு தனி ஒருவன், வேலைக்காரன் படங்களில் நடித்து இருந்தார். தற்போது மூன்றாவது முறையாக காட்ஃபாதர் படத்தில் இணைந்து நடித்துள்ளார். நயத்தரவுடன் 3-வது முறையாக பணிபுரிவது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்று மோகன் ராஜ கூறியுள்ளார். மோகன் ராஜ இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும், காட்ஃபாதர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இயக்குனர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஊடகத்துறையினரை ஊக்குவித்த மா.சுப்பிரமணியன்… என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு…