சிவகார்த்திகேயனை சந்தித்த சூரி….காரணம் என்ன?

ஒரு தொகுப்பாளராக தனது திரையுலக பயணத்தை துவங்கி தமிழ் சினிமா துறையில் தனகென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். முதலில் தொலைகாட்சியில் பணியாற்றி பின்பு வெள்ளித்திரையில் கதாநாயகர்களின் நண்பனாக நடித்து மெரினா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
பின்பு, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, கானா , மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ, டாக்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. தொடர்ந்து இவர் அயலான் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது சிவகார்த்திகேயனின் நண்பனும், நகைச்சுவை நடிகருப்மான சூரி நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து கேக் வெட்டிய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.