வைரலாகும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக தனது திரையுல பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வளர்த்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் ‘டாக்டர்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது இவர் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் வருகிற மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘அயலான்’ திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். புதிதாக தெலுங்கில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்தது . இந்தநிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பிப்ரவரி 17-ஆம் தேதி தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடினார்.இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் SK20 என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளது.

இந்த படத்தில் சத்யா ராஜ், ப்ரேம்கி அமரன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஷிவர்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர் . தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…