ரஜினி, அஜித்தை எல்லாம் அடித்து தூக்கிய விஜய்… இணையத்தை அதிரவைத்த தரமான சம்பவம்!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி இந்த படம் உருவாகியுள்ளது உள்ளது.இ ந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் சூட்டப்பட்டு, கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகின. படத்தின் அப்டேட்டாக காதலர் தினத்தை முன்னிட்டு, அரபிக்குத்து பாடல் நேற்று வெளியானது.

அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான ‘அரபிக்குத்து’ பாடல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. பாடல் வெளியாகி 2 மணி நேரத்திலேயே 1 கோடி பார்வையாளர்களைக் கடந்து, உலகிலேயே குறைந்த நேரத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமைய அடைத்திருந்து. தற்போது ‘அரபிக்குத்து’ பாடல் அடுத்தடுத்து பல ரெக்கார்டுகளை தவிடு பொடியாக்கி வருகிறது.

இந்த பாடல் வெளியிட்டிற்கு முன்னதாக ‘பான் வேல்டு பாடல்’ என அனிருத் கூறியிருப்பார். தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியான 48 மணி நேரத்திலேயே உலக அளவிலான டாப் 200 பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியப்பாடல் என்ற சாதனையை பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் படைத்துள்ளது. ரஜினி, அஜித் பட சாதனைகளை வைத்து விஜய் படத்தை நெட்டிசன்கள் மட்டம் தட்டி வரும் நிலையில், அனைவரையும் அடித்து தூக்கி ரெக்கார்டு பிரேக் செய்திருக்கிறது ‘அரபிக்குத்து’ என்ற செய்தி விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.