ஜனநாயக கடமையை ஆற்றிய அருண் விஜய்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பொதுமக்களை போல் திரையுலக பிரபலங்களும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது நடிகர் விஜய்குமாரின் மகனான அருண் விஜய் தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் இன்று காலை சென்னை ஈக்காட்டுதங்களில் உள்ள கிறிஸ்டியன் மேல்நிலை பள்ளியில் நடிகர் அருண் விஜய் தனது வாக்குகளை பதிவு செய்தார்.
இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ‘யானை’ திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து ஓ மை டாக், பார்டர், சினம், அங்கினி சிறகுகள் போன்ற பல திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.