மீண்டும் நடிக்க வரும் தனுஷ் பட நாயகி!

தமிழில் சினிமாவில் குத்து,கிரி, பொல்லாதவன்,தூண்டில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகா திகழ்ந்தவர் நடிகை ரம்யா. இவர் தமிழில் கடைசியாக 2011-ல் வெளியான சிங்கம்புலி படத்தில் நடித்து இருந்தார். பின்னர் காங்கரஸ் கட்சியில் இணைந்து கர்நாடக அரசியலில் ஈடுபட்டு வந்தார். மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யும் ஆனார்.

இந்த நிலையில் திடிரென்று ரம்யா கட்சி பணிகளில் இருந்து விலகினார். சமீபத்தில் அவர் மீண்டும் நடிக்க தயாராவதாக திரையுலகில் பல தகவல்கள் வெளியானது. இப்படி பரவி வந்த முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் நடிக்க வருவது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” நான் சினிமாவில் மீன்டும் நடிக்க வருவது குறித்து பலரும் ஆர்வங்களையும்,யூகங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .கடந்த சில மாதங்களாக கதைகளை கேட்டு வருகிறேன் .நல்ல கதை அமைந்ததும் உடனே நடிப்பது குறித்து அறிவித்து விடுவேன் ” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.