3 மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியான வளம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு ,இந்தி,படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படமும்,5 தெலுங்கு படங்களும்,ஒரு இந்தி படமும் கைவசம் வைத்திருக்கிறார்.தெலுங்கு படங்களின் படப்பிடிப்பு முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. பாரிஸ் பாரிஸ் படமும் முடிந்துள்ளது.

இந்த நிலையில் ‘பப்ளி பவுன்சர்’ என்ற இந்த படத்தில் நடிக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகிறது.இதில் சவுரப் சுக்ல, அபிஷேக் பஜாஜ்,சாஹில் வைத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தை மது பண்ட்ராக்கர் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.தனது படம் 3 மொழிகளில் தயாராவதால் தமன்னா மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘நான் இதுவரை நடித்த படங்களில் இது வித்தியாசமான, மகிழ்ச்சியான கத்பாத்திரமாக இருக்கும்’ என்று தமன்னா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…