சிம்புவுக்கு என்ன ஆச்சு?… டி.ராஜேந்தர் அளித்த அதிரடி விளக்கம்!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மக்கள் என அனைவரும் அமைதியுடன் வாக்களித்தனர்.
இந்நிலையில் நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, அருண்விஜய், ஜஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரை தவிர திரைப்பிரபலங்கள் பலரும் வாக்களிக்க வரவில்லை. ஆனால் ரஜினிகாந்த், அஜித், விஜயகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், திரிஷா, வடிவேலு, ஆர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாக்களிக்க வராதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதில் சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது.
தியாகராய நகர் 117வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிம்பு தற்போது மும்பையில் இருப்பதால் வாக்களிக்க வரமுடியவில்லை என விளக்கமளித்தார்.