கொரோனாவால் பாதிக்கபட்ட ஜஸ்ட்டின் பீபர்!

புகழ்பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் பாடிய பல பாடல்களை ரசிகர்கள் கேட்டு கொண்டாடி வருகிறார்கள். சில ஹாலிவுட் படங்களில் நடித்தும் இருக்கிறார். இசை உலகில் அதிகம் சம்பாதிக்கும் ஜஸ்டின் பீபருக்கு ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் ஜஸ்டின் பீபர் இருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட உள்ளது. இதையடுத்து தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று காரணமாக லாஸ் வேகாஸில் நடைபெற இருந்த, அவரது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் பீபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *