இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாரா ஹிருத்திக் ரோஷன்?

இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ரித்திக் ரோஷன். இவர் 2000-ல் இண்டீரியர் டிசைனர் சுஷானா கானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹிரோ கான், ஹிருதன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2014-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரித்திக் ரோஷனும் சுசானா கானும் விவாகரத்து செய்து கொண்டனர். ஆனாலும் குழந்தைகள் நலனுக்காக நட்புடன் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரித்திக் ரோஷன், இளம் இந்தி நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இருவரும் மும்பை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கைகோர்த்தபடி ஜோடியாக வெளியே வந்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. தற்போது ஹிருத்திக் ரோஷனும் சபா ஆசாத்தும் குடும்பத்தினருடன் இருக்கும் புதிய புகைப்படம், சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் ரித்திக் ரோஷனின் தாய் பிங்கி ரோஷனும் இருக்கிறார். இதன் மூலம் ரித்திக் ரோஷன், சபா ஆசாத் காதல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருபதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…