முதல் இடத்தை பிடிக்க விருப்பமில்லாத சமந்தா…..

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர்கள் சமந்தாவிடம் உங்கள் லட்சியம் என்ன? என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எனது லட்சியமாக கருதுவது என்னவென்றால் சமந்தா என்ற ஒருவர் இருந்தார் என்பதை எதிர்காலத்தில் அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் என்றார்.

சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க ஆர்வம் உள்ளதா ? என்ற இன்னொரு ரசிகரின் கேள்விக்கு, நடிகையாக நம்பர் 1 இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. முதலிடத்தில் இருக்கும் நடிகை என்று சொல்வதை விட தொடர்ந்து நிறைய நல்ல படங்களில் நடித்து எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவது தான் முக்கியம் என்றார்.

எந்த மாதிரி படங்களை விரும்புகிறீர்கள்? என்று கேள்விக்கு எனக்கு நகைச்சுவை படங்களை பிடிக்கும் என்றார். மேலும் உடற்பயிற்சி சம்பந்தமான கேள்விக்கு சமந்த பதிலளிக்கும் போது, ஜிம்முக்கு செல்வது உடல் நலனுக்கு முக்கியமானது. அதுபோல் தியானம் செய்வது மனநலத்திற்கும் முக்கியமானது என்றார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல இரண்டு காதல் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களில் சமந்தா நடித்து முடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.