100 கோடி அப்பு…..பிரபாஸ் படத்திற்கு பிரமாண்ட அரங்கு!

தெலுங்கு நடிகரான பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் . நடிகர் பிரபாஸ் மார்க்கெட் சமீபகாலமாக உச்சத்திற்கு சென்றுள்ளது. இதனால், அவர் நடிக்கும் படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள். இதையடுத்து பிரபாஸ் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒரு படத்துக்கு ரூபாய் 100 கோடி ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது. தற்போது ராதே ஷூயாம், சலார், ஆதிபுருஷ், ஆகிய மூன்று படங்கள் கைவசம் உள்ளன. இந்த படங்களும் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் இந்தியா படமாக உருவாகிறது. ராதே ஷியாம் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே வருகிறார். இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

1970-ம் வருட காலகட்டத்தில் நடக்கும் கதையம்சத்தில் தயாராகிறது. இதற்காக அந்த காலத்தில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இந்த அரங்கை 100 கோடி செலவில் அமைத்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படதிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.