விஜய் தேவரகொண்டா ஒரு பயந்தாங்கோலி-நடிகை அனன்யா!

பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே, பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் தேவர கொண்டா, தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கோலி நடிகர் என்று அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து உள்ளார்.

இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அனன்யா பாண்டி அளித்துள்ள பேட்டியில், திரைப்படங்களில் விஜய் தேவரகொண்டா தைரியசாலியாகவும், முரடனாகவும் நடிக்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு பபயந்தாங்கோலி. யாரோடும் அவ்வளவாக பேச மாட்டார். அவர் வேலையை முடித்துக் கொண்டு அமைதியாக இருப்பார். நடிப்பில் அவரிடம் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கிடைத்தது.

ஆனாலும் சினிமாவில் காட்டுவது போன்ற தைரியம் அவருக்கு நிஜ வாழ்க்கையில் இல்லை என்றார். விஜய் தேவர்கொண்டாவை பயந்தாங்கோலி என்று கேலி செய்து அவமதித்து விட்டதாக விஜய் தேவர்கொண்டாவின் ரசிகர்கள் அனன்யா பாண்டேவை வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது இது தெலுங்கு சினிமாவட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.