தெலுங்கில் உருவாக இருக்கும் ‘மாநாடு’ திரைப்படம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில், எஸ். ஜெ சூர்யா வில்லத்தனத்தில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, மஹத், அரவிந் ஆகாஷ், டேனி, எஸ். எ. சந்திரசேகர் என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தமிழ் சினிமாவின் முதல் டைம் லூப் கதையாக வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது.
மாநாடு திரைப்படம் வெளியான முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி வசூலை பெற்றது. முதல் பத்து நாட்களிலேயே 50 கோடி வசூலை எட்டியது. வெளிநாடுகளில் மாநாடு பெரும் வெற்றி பெற்றதையடுத்து இத்திரைப்படம் 100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு ‘மன்மத லீலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
‘மன்மத லீலை’ படத்தின் படப்பிடிப்பு பிசியாக நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது ஒரு தகவல் தமிழ் சினிமாவில் பரவி வருகிறது. மாநாடு திரைப்படத்தை தெலுங்கில் வெங்கட் பிரபுவே இயக்குக்கிறார். தெலுங்கில் சிம்பு வேடத்தில் நாகசைதன்யாவும், கல்யாணி பிரியதர்ஷன் வேடத்தில் பூஜா ஹெக்டேவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.