ஒரே நாளில் வசூல் சாதனை படைத்த வலிமை!

இரண்டு வருடங்களுக்கு மேல் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம் ‘வலிமை’. எச். வினோத் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன் இசையமைத்து இருக்கிறார். கிப்ரான் பின்னணி இசை அமைத்து இருக்கிறார். அஜித் குமாருடன் இணைந்து ஹிமா குரேஷி, கார்த்திகேய என பலர் நடித்து இருக்கிறார்கள்.

பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. வெளியான முதல் தற்போதுவரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அஜித் அரசிகள் மட்டுமே படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் படத்தின் வசூல் சாதனையை பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

உலகமுளமுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வலிமை திரைப்படம் முதல் நாளில் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் சுமார் 34கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக சினிமா விமர்சனங்கள், திரையரங்கு விமர்சனங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.