‘பிக்பாஸ் அல்டிமேட்’… ஒருநாளைக்கு சிம்புவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg boss simbu

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சிம்பு பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. டிஸ்னி ப்ளட் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24X7 ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்த அறிமுகத்தின் போது கூட “பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு பிடித்தமான ஒன்று, இது அடுத்தகட்டமாக ஓடிடிக்கு மாறும் போது நான் அதில் ஒருவனாக பயணிப்பதில் பெருமையடைகிறேன்” என்றெல்லாம் பேசியிருந்தார்.

கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல் ஹாசன், அதற்காக ஒதுக்கப்பட்ட தேதிகளை, பிக்பாஸ் அல்டிமேட் ஷூட்டிங்கிற்காக மாற்ற வேண்டியுள்ளதால் இப்படியொரு முடிவெடுத்ததாகவும், பிக்பாஸ் சீசன் 6-ல் சந்திக்கலாம் எனக்கூறி ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.

இதனையடுத்து சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான புரோமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட 60 நாட்கள் நடக்கும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. நான்கு வாரங்கள் நெருங்கும் நிலையில் மீதம் 5 வாரங்கள் மட்டுமே உள்ளன. இதில் சிம்பு வரும் காட்சிகள் வாரத்தில் ஒருநாள் ஷூட் செய்யப்பட உள்ளது. அப்படி பார்த்தால் 5 நாட்கள் சிம்பு ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். ஒருநாள் ஷூட்டிங்கிற்கு சிம்புவிற்கு 1 கோடி ரூபாய் சம்பளமாம்., மொத்தம் 5 நாட்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…