புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய்… வைரல் வீடியோ!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நிலையில் படப்பிடிப்பின் காரணமாக பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி ஸ்டாலின், கமல் உள்ளிட்ட நடிகர்கள் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். புனித் ராஜ்குமார் மரணமடைந்த போது விஜய் பீஸ்ட் படத்திற்கான வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்தார், இதனால் அவர் பங்கேற்க முடியாமல் போனது.
ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு இந்திய திரும்பிய பிறகும் விஜய் புனித்ராஜ்குமார் நினைவிடத்திற்கு செல்லாதத கடும் விமர்சனங்களை குவித்து வந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் பெங்களூரு சென்று புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த புகைப்படங்களும், வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.