குஷியில் தனுஷ் ரசிகர்கள்!

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஓ.டி.டி.யில் பல படங்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் தனுஷ் நடிப்பில் உருவான ‘மாறன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்திருந்தார்கள். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க மாளவிகா மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைபடத்திற்கு விவேகானந்த சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாறன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சனிபத்தில்தான் இந்த படத்தில் முதல் பாடலான ‘பொல்லாத உலகம்’ என்ற பாடல் வெளியாக இருந்தது. இப்பாடலை நடிகர் தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு இருவரும் இணைந்து பாடியிருக்கின்றனர். தொடர்ந்து படத்தின் இரண்டாம் சிங்கிள் விடியோவும் வெளியானது. தற்போது இந்த படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. மாறன் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.மேலும் ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில், #Maaran படத்திற்கு பிரேத்தியேக எமோஜியை வெளியிட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம். இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *