கொரோனவால் பாதிக்கப்பட்ட சுருதிஹாசன்!

கொரானா பரவல் இன்னும் ஓயாத நிலையில், நடிகர் நடிகைகள் தொடர்ந்து இந்த வைரஸால் பாதிப்படைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சுருதிஹாசன் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், எல்லோருக்கும் நான் தெரிவிப்பது மகிழ்ச்சியான விஷயம் இல்லை. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இந்த தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். உங்களை விரைவில் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசன் குணமடைய வாழ்த்தி ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலையின் போது கமல்ஹாசன், சத்யராஜ், மம்மூட்டி, வடிவேல், மகேஷ் பாபு, திரிஷா, ஷோபனா, மீனா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளுக்கு ஒரு தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்குப்பின் மீண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.