நடிகர் ஆரவ் பாடலை வெளியிட்ட சிம்பு!

தமிழில் ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆரவ். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். 2017-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து ராஜபீமா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மீண்டும் வா அருகில் வா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆரவுக்கும் ஜோஸ்வா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ராஹிக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.சமீபத்தில் தான் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆரவ் கதாநாயகனாக நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிபெறவில்லை.

தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தை பிடிக்க இடைவிடாமல் உழைத்து வருகிறார் ஆரவ். தற்போது இவர் வாமனவாழ என்ற பாடலில் நடித்திருந்தார். இந்த பாடலில் ஆரவிற்கு ஜோடியாக பிரியங்கா திமேஷ் நடித்து இருக்கிறார். இந்த பாடலை நடிகர் சிம்பு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். தற்போது அறிவித்தபடியே இந்த பாடலை நடிகர் சிம்பு திங்க்மியூசிக் தளத்தின் மூலம் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.