கோ, கவண் படங்களை போல் உருவாகியுள்ளது மாறன் திரைப்படம்!

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஓ.டி.டி.யில் பல படங்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் தனுஷ் நடிப்பில் உருவான ‘மாறன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்திருந்தார்கள். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க மாளவிகா மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைபடத்திற்கு விவேகானந்த சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாறன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதனிடையே நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அறிவித்தபடியே நேற்று மாலை 6 மணிக்கு ‘மாறன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலரில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனின் ரோமான்ஸ் காட்சிகள் உச்சத்தில் உள்ளது. ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் கோ, கவண் போன்ற படங்களை போல் மாறன் படம் இருக்கும் என்று தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.