விஜய் மகன் எனது தீவிர ரசிகன்-யுவன்!

தனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தற்போது இசை துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதால் இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதனை கொண்டாடும் விதமாக யுவன் சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கதை நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படத்தை விரைவில் இயக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் விருதுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய யுவன், தனக்கு முக்கிய விருதுகள் கிடைக்கவில்லை என்று வருத்தம் அடைந்ததில்லை என்றும், விருதை மட்டும் எண்ணி இசையமைத்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இசையமைப்பாளர்கள் வாழ்வின் ஓரிடத்தில் ஆன்மீகத்திற்கு திரும்புவது இயல்புதான் என்ற யுவன் சங்கர் ராஜா, “கடவுள் பற்றிய தேடல் எனக்கு ஏற்பட அம்மாவின் இழப்புதான் காரணம் என்றும் கூறினார்.
மேலும் பயணங்களின் பொது இளையராஜா பாடல்கள் கேட்பேன் என்றும் கூறி உள்ளார். லதா மங்கேஸ்கருடன் பணியாற்ற வென்றும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது நடக்காமல் போனது வருத்தம் என்றும் கூறினார். தளபதி விஜயின் மகன் ‘யுவனிசம்’ என்ற டீ சர்ட் அனைத்து இருந்தது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. விஜயே எனது மகன் உங்கள் மீது வெறியன் என என்னிடம் நேரில் கூறினார் என்றும் குறிப்பிட்டார்.