மீண்டும் அனுஷ்காவிற்கு குவியும் பட வாய்ப்புகள்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அனுஷ்கா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்த்தும் நடித்தார். ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்த பிறகு தொடர்ந்து அவரால் எடையை கூட்டி நடித்த பிறகு தொடர்ந்து அவரால் எடையை குறைக்க முடியவில்லை.

இதனால் இளம் நடிகர்கள் ஜோடி சேர்க்க மறுத்தனர்.இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது.கடைசியாக 2019-ல் நிசப்தம் படத்தில் நடித்தார். இந்த படம் தாமதமாக 2020 அக்டோபர் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அதன்பிறகு அனுஷ்காவுக்கு படங்கள் இல்லை. அனுஸ்காவையும், தெலுங்கு நடிகர் பிரபாஸையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன.

இருவரும் திருமணமும் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை அனுஸ்கா மறுத்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க அனுஸ்காவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அனுஷ்கா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 புதிய படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.