மூன்று வருடங்களுக்கு பிறகு வெளியாகும் கமல் படம்!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2018-ல் விஸ்வரூபம் பாகம் இரண்டு வெளியானது. அதன் பிறகு இந்தியன்-2 படத்தில் நடித்தார். அந்த படம் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பிக் பாஸ் மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபட்டதால் படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்யும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பையும் உடனடியாக தொடங்கினர். இதில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை தேர்வு செய்தனர்.

மொத்தம் 110 நாட்களில் முழு விக்ரம் படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கமல் நடிப்பில் 3 வருடங்களுக்கு பிறகு வருவதால் விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. ரிலீசுக்கு முன்பே விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைகாட்சி உரிமை ரூபாய் 112 கோடிக்கு விலைபோய் இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *