ராதே ஷியாம் படத்தின் முன்னோட்டம் வெளியானது!

பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராக இருக்கும் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ராதே சியாம்.
இந்த திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கிறார். தெலுங்கில் இந்த திரைப்படத்திற்கு இசை எஸ்.தமன் இசை அமைத்திருந்தார். பூஷன் குமார், வம்சி, பிரமோத் பிரசிதா தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், டீஸர், டிரெய்லர் என பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற மார்ச் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ராதே ஷியாம் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து பட குழுவினர் தற்போது ராதே ஷியாம் படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.