விஜய் சேதுபதியை கவுரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

ஐக்கிய அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை வைத்து இருப்பவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக கருதப்படுவார்கள். மேலும் கடந்த ஆண்டு ஐக்கிய அமீரக அரசு இந்திய நடிகர்கள் பலருக்கு இந்த விசாவை வழங்கி கௌரவித்துள்ளது.

ஏற்கனவே இந்திய நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், நடிகை ஊர்வசி ரவுடாலா, மீரா ஜாஸ்மின், அமலாபால் ஆகியோர்க்கு கோல்டன் விசாவை வழங்கி வந்தது ஐக்கிய அமீரக அரசு. சமீபத்தில் நடிகர் சிம்புவிற்கு அவர் பிறந்தநாளன்றே கோல்டன் விசாவை வழங்கியது ஐக்கிய அரபு அமீரக அரசு. தற்போது ஐக்கிய அரபு அமீரகம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடைசி விவசாயி. மேலும் இவர் நடிப்பில், உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….