கல்யாண புடவையை திருப்பி கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து பின்பு குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ஒரு விழாக்கோலமாக பேசப்பட்டது. திருமணத்தின்போது சமந்தா அணிந்த புடவை நாக சைதன்யாவின் அம்மாவின் அம்மா பாட்டியின் திருமணப் புடவை.

அந்த புடவையை ரூபாய் 40 லட்சம் வரை செலவு செய்து புதுப்பித்துக் கொடுத்து அதைக் கட்டிக் கொள்ளும் படி நாக சைதன்யா சொன்னாராம். ராமா நாயுடுவின் மனைவி தக்கு பாட்டி ராஜேஸ்வரி தனது திருமணத்தின் போது அணிந்த அந்த புடவையை பற்றி சினிமா நட்சத்திரங்களில் இருந்து ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டி பேசினர்.

ஆனால் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சமந்த அந்த புடவையை தூக்கி குடும்பத்தினருக்கு அதாவது தனது முன்னாள் மாமியாரான நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு திருப்பிக் கொடுத்துவிட்டாராம். நாக சைதன்யாவுக்கு சம்பந்தப்பட்ட நினைவுகள் எதுவுமே என்னோடு இருக்க வேண்டாம் என அந்த புடவையை திருப்பிக் கொடுத்ததாக கூறியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…