மாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்!

சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்பு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து நண்பேன்டா, கேத்து,மனிதன், சரவணன் இருக்க பயமே, சைக்கோ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக திகழ்கிறார்.

தொடர்ந்து ஊதிய நிதி கண்ணை நம்பாதே, ஏஞ்சல், நெஞ்சுக்கு நீதி, பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தற்போது மாறி செல்வராஜ் இயக்க உள்ள மாமன்னன் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஆகியோர் நடிக்கின்றனர்.

‘மாமன்னன்’ படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மாறி செல்வராஜ் பரையேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். கடைசியாக கர்ணன் படத்தை இயக்கி இருந்தார். இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது மாமன்னன் படத்தின் அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.