தளபதியுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா மனிதனா?

தளபதி விஜய் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பீஸ்ட் படத்தின் வேலைகள் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. இது தளபதியிக்கு 66-வது படம். குடும்ப கதையம்சம் கொண்ட அதிரடி சண்டை படமாக இந்த திரைப்படம் தயாராகிறது.

தளபதி விஜய் இந்த படத்தின் கதையை கேட்ட பிறகு, கடந்த இருபது வருடங்களில் இதுபோன்ற கதையை கேட்டது இல்லை என்றும், இது தனது திரையுல வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று தெரிவித்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை படைத்தது வருகிறது.

தற்போது மீண்டும் தளபதி 66 படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. வம்சி இயக்கும் படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிக மந்தானா நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிரது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இதுவரை அதிகார பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published.