சிரஞ்சீவியுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு,இந்தியில் பல படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நடிப்பில் மட்டும் தன் கவனத்தை செலுத்தாமல் இசை துறையிலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
கடைசியாக நடிகர் பிரபாஸ்க்கு ஜோடியாக சலார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் ஸ்ருதிஹாசன் . தொடர்ந்து ஸ்ருதிஹாசன் 61 வயது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்க்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது மீண்டும் ஸ்ருதிஹாசன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது . பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஸ்ருதிஹாசன். மைத்திரி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.