சிம்பு வழக்கில் ஒரு லட்சம் அபராதம்!

மைக்கேல் ராக்கப்பன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் 2016-ஆம் வெளியான திரைப்படம் ‘அன்பானவன்,அடங்காதவன், அசராதவன்’. இந்த திரைப்படத்திற்கு சிலம்பரசனுக்கு ரூபாய் 8 கோடி சம்பளம் பேசப்பட்ட அட்வான்ஸ் தொகையாக முதலில் ஒரு கோடியே ஐம்பத்தி ஒன்று லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மீதி சமபலம் பாக்கியான ரூபாய் 6.48 கோடியை தராததால் சிம்பு நடிகர் சங்கத்தில் மீதி சம்பளத்தை பெற்று தர கோரி புகார் அளித்து இருந்தார். அதே போல் படம் தோல்வியடைந்ததை அடுத்து, படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிலம்பரசனிடம் பெற்று தர கோரி மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் சிம்பு, மைக்கேல் ராயப்பன் தனக்கு எதிரான கருத்துக்களை இணையதளத்தில் பரப்பி வருவாதாக கூறி அவருக்கு எதிராக 1 கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது 1080 நாட்கள் ஆகியும் எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை தாக்கல் செய்யாததால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது, அந்த தொகையை வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.