3வது வாரத்திலும் வசூலில் தட்டித்தூக்கும் வலிமை… மொத்த கலெக்ஷன் இவ்வளவு கோடியா?

ஹிமா குரேஷி, கார்த்திகேயா, புகழ் என பலர் நடித்து இருக்கிறார்கள்.2 வருட காத்திருப்புக்கு பிறகு படம் வெளியாகியுள்ள நிலையில், தற்போதுவரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கடந்த பொங்கல் அன்று திரைப்படம் வெளியாக தயாரான நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது பிப்ரவரி 24ம் தேதி படம் வெளியானது. உலகம் முழுவதும் மொத்தம் 4000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியாகி, இதுவரை 18 நாட்களை கடந்துள்ளது.
3 வாரங்களை கடந்துள்ள நிலையில் வலிமை படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இந்த திரைப்படம், 154 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அளவில் 220 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.