6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது Dune திரைப்படம்

Dune என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது.

சினிமா உலகின் மிக உயரிய மற்றும் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது .சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி உள்ளிட்ட சினிமாவின் முக்கியமான 24 பிரிவுகளுக்கான விருதுகள் இந்த விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

94வது ஆஸ்கர் விழாவில் டியூன் (dune) திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை குவித்து அசத்தியுள்ளது. டெனிஸ் வெல்நொவ் இயக்கிய டியூன் படத்துக்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழக்கப்பட்டுள்ளது. 10 பிரிவுகளில் இறுதி பட்டியலுக்கு சென்ற dune 6 விருதுகளை பெற்றுள்ளது.

sci-fi படங்களுக்கு பெயர் போன டெனிஸ் வெல்நொவ் தனது டியூன் திரைப்படம் மூலம் மீண்டும் சாதித்துள்ளார். 2 பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள டியூன் திரைப்படத்தின் முதல் பாகமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

டியூன் என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. dune என்ற வேற்று கிரகத்தை ஆக்கிரமிக்க நடைபெறும் போட்டியே இந்த படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. இத்தகைய sci-fi படத்திலும் குடும்பம், பாசம், துரோகம் உள்ளிட்டவற்றை புகுத்தியிருப்பது இந்த படத்தின் சிறப்பு.

1984ல் ஏற்கனவே இந்த நாவலின் அடிப்படையில் திரைப்படம் வெளியாகி வர்த்தக ரீதியாக தோல்வியை சந்திருந்த வேளையில், அதே நாவலை கையில் எடுத்து அசத்தியுள்ளார் இயக்குநர்.

இதில் முக்கிய விருதாக சிறந்த பின்னணி இசைக்கான விருதை இந்த நூற்றாண்டின் ஆக சிறந்த இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஜிம்மர் பெற்றிருக்கிறார். 12 முறை இந்த விருதுக்கு தேர்வாகியுள்ள ஹேன்ஸ் ஜிம்மருக்கு இது 2வது ஆஸ்கர் விருதாகும்.

தொழில்நுட்ப ரீதியாக பல விருதுகளை பெற்றுள்ள டியூன் திரைப்படம், திரையரங்கில் வெளியாகி தற்போது amazon prime தளத்தில் இடம் பெற்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.