ஆஸ்கர் மேடையில் காமெடி நடிகரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்… வைரல் வீடியோ!

Will Smith

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் காமெடி நடிகரை கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வில் ஸ்மித், இவர் நடிப்பில் வெளியான மென் இன் பிளாக், பேட் பாய்ஸ்
படங்களின் அடுத்த பார்ட்கள் உலக அளவில் பெரிய ஹிட் அடித்துள்ளது. காமெடி, ஆக்‌ஷன், சென்டிமேன்ட் என அனைத்திலும் வெளுத்து வாங்கும் வில் ஸ்மித்திற்கு, 2007ம் ஆண்டு நடித்த பர்சூட் ஆப் ஃஹேப்பினஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படது. அதற்கு முன்னதாக 2002ம் ஆண்டு வில் ஸ்மித் நடித்த அலி திரைப்படமும் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தது. ஆனால் இரண்டு முறையும் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.

இந்நிலையில் வில் ஸ்மித்தின் நீண்ட நாள் கனவு 2022ம் ஆண்டு நிறைவேறியுள்ளது. செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸின் நிஜ வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட கிங் ரிச்சர்ட் படத்தில் ரிச்சர்ட் வில்லியம்ஸாக நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது 94வது ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்டுள்ளது. முதன் முறையாக ஆஸ்கர் விருது பெற்ற வில் ஸ்மித் மேடையிலேயே கண் கலங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதற்கு முன்னதாக விருது வாங்க மேடைக்கு வந்த வில் ஸ்மித் எதிர்பாராதவிதமாக செய்த காரியமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற மேடை ஏறிய வில் ஸ்மித், தனது மனைவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் செய்ததற்காக, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கி கொண்டிருந்த கிறிஸ் ராக் என்ற காமெடி நடிகரை விளையாட்டாக கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.