சிவகார்த்திகேயன் மறைந்த உண்மைகள்… புட்டுபுட்டு வைத்த பிரபல தயாரிப்பாளர்!

நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை. இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் அந்த படம் எடுக்கப்பட்டது என்றும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தால் ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும், வரிகளுடன் சேர்த்து மீதம் ரூ. 2.40 கோடியை வழங்க வேண்டுமென சிவகார்த்திகேயன், இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார்.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்து விட வேண்டாம் எனவும் சிவகார்த்திகேயன் கூறினார்.

வழக்கின் விசாரணை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…