காவியை கிழிக்கும் விஜய்… பாஜகவினரை கொந்தளிக்க வைத்த குறியீடு!

Beast

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டு படங்களை இயக்கி ஹிட் கொடுத்த நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியானது. விஜய் ரசிகர்கள் டிசர் வேற லெவலுக்கு இருப்பதாக கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல் படத்தில் அரசியல் ரீதியிலான ஏதாவது குறியீடு அல்லது டைலாக் உள்ளதா? என கண்ணில் விளக்கெண்ணய் ஊற்றி தேடியவர்களுக்கு செம்ம கன்டெண்ட் கிடைத்துள்ளது.

சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக அங்குள்ள மக்களை பிடித்து வைக்கிறார்கள். அதில் இருக்கும் ரா அதிகாரியான விஜய் அவர்களை எதிர்த்து போராடுவதை ரத்தம் தெறிக்க, தெறிக்க டீசரில் காட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு சீனில் விஜய் ஆரஞ்சு கலர் கேன்வஸை கிழித்துக் கொண்டு வருவது போல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் விஜய் காவியை கிழிக்கிறார். பாஜகவை பழி தீர்த்த ஜோசப் விஜய் என சகட்டு மேனிக்கும் ஸ்கிரின் ஷாட் உடன் ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…