‘ஓ மை டாக்’ டத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அருண் விஜய். முறை மாப்பிள்ளை படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
அதன் பிறகு அருண் விஜய் குற்றம், செக்க சிவந்த வானம், தடம் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். பார்டர், அக்னி சிறகுகள், யானை,ஓ மை டாக், சினம் போன்ற பல படங்கள் திரைக்கு வர உள்ளது.
தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவான ‘ஓ மை டாக்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. சரோவ் ஷண்முகம் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.