வெங்கட் பிரபுவுடன் இணையும் நாகசைதன்யா!

தமிழில் சென்னை 600028 என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். கோவா, சரோஜா, பிரியாணி போன்ற படங்களை இவர் இயக்கி உள்ளார். அஜித் குமாரை வைத்து ‘மங்காத்தா’ என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. தமிழ் சினிமாவில் முதல் முதலாக டைம் லூப் கதையை வைத்து படம் இயக்கிய பெருமை வெங்கட் பிரபுவையே சேரும். மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மத லீலை’ திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

வெளியாகும் போதே சர்ச்சையோடும், பிரச்னைகளுடனும் வெளியானது. தற்போது வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு முதல் முதலில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். இது நாகசைதன்யாவின் 22-வது திரைப்படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராக உள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.