விரைவில் தொலைக்காட்சியில் வலிமை!

அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வலிமை’. வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. 150 கோடி பட்ஜெட்டில் உருவான வலிமை படம் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது. திரையரங்கில் படைத்த சாதனையை தாண்டி வலிமை படம் zee5 ஓடிடி தளத்திலும் ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

அஜித் மீண்டும் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் எச். வினோத்துடன் இணைகிறார். இன்னும் பெயரிடபடாத அஜித்61 படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் அஜித்தின் வலிமை படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

அதாவது, அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தை தொலைக்காட்சியில் முதல் முதலாக வருகிற மே-1ஆம் தேதி ஒளிபரப்ப உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….