‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகிறது!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து உருவாகி உள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ட்ரைலர் வெளியாகிய 5 நாட்களில் யூடியூபில் 45 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.
அதுமட்டும் இல்லாம் இதற்க்கு முன்பு பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு பாடல்களின் லிரிகள் வீடியோவும் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை படைத்துள்ளது. அரபிக் குத்து பாடல் 275 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு யூடியூபில் சாதனை படைத்துள்ளது.
அதை தொடர்ந்து “ஜாலி ஓ ஜூம்காண’ பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி இதுவரை யூடியூபில் 41 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் இருந்து 3-வது பாடல் இன்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் ‘பீஸ்ட்’ ட்ரைலர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.