மீ டூ வழக்கில் சிக்கிய நடிகர் அனீஷ் மேனன்!

மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் அனிஷ் மேனன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர் மோகன்லால் நடிபில் வெளியான திரிஷியம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும் இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு அடர் லவ், லூசிபார், டிரைவிங் லைசன்ஸ் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இறுகிறார். இவர் கேரளாவில் நடிப்பு பயிற்சி மையம் ஒன்று நடத்தி வருகிறார்.

அனிஷ் மேனன் மீது இளம் பெண் ஒருவர் மீ டூ புகாரை தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த பெண் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்தது. அதனால் அனிஷ் மேனன் நடத்திய நடிப்பு பயிற்சியில் சேர்த்தேன். வகுப்பின் பொது அனிஷ் முதலில் எனது கன்னத்தை வருடினார். பின்னர் உடலில் மற்ற பகுதிகளையும் தொட ஆரம்பித்தார்.

மேலும் உடலை தொடுவது பயிற்சியின் ஒரு பகுதி என்று எனது பெற்றோரையும் நம்ப வைத்தார். ஒரு கட்டத்தில் எனக்கு உதட்டில் முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் நடிப்பு பயிற்சிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன் என்றார். என்னைப்போல் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் அந்த பெண் இட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *