இணையத்தை கலக்கும் அஜித் குமாரின் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒரு வராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘வலிமை’. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது இருக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார். அஜித் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்.

நடிகர் அஜித் குமார் படங்களில் நடிப்பதை தாண்டி அவ்வப்போது பைக்கில் சுற்று பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்து இருப்பார். சுற்று பயணம் மேற்கொள்ளும் போது அவரது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார். அப்படி சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவியது.

தற்போது மீண்டும் அஜித் குமாரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ரசிகருடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துள்ளார். அதில் ak 66 லுக்கில் மாஸாக இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Temple City AJITH Fans-Madurai (@TCAFMDU) / Twitter

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…