லத்தி படத்தின் முதல் லுக் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் எனிமி மற்றும், வீரமே வாகை சுடும். இந்த இரு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று தரவில்லை.

தற்போது விஷால் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பதை தாண்டி துப்பறிவாளன்-2 திரைப்படத்தை இயக்கியும் வருகிறார். மேலும் மார்க் ஆண்டனி என்ற படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது விஷால் நடிப்பில் முருகானந்தம் இயக்கத்தில் ‘லத்தி’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தை நடிகர் நந்தா மற்றும் ரமணா இணைந்து இயக்குகிறார்கள். யுவன் இசையமைத்து இருக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று ‘லத்தி’ படத்தின் முதல் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. அச்டின் திரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விஷால் உதவி காவலாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Laththi Movie Review (2022) - Rating, Cast & Crew With Synopsis

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…