‘இடியட்’ இயக்குநரின் அடுத்த படம்… டைட்டிலை பார்த்து சிம்பு ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

‘தில்லுக்கு துட்டு’, ‘இடியட்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்பாலா தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சந்திரமௌலி – மீனாக்‌ஷி கோவிந்தராஜன் – ரெபா மோனிகா நடிக்கும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு”

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் “2 MB” ரகுநாதன் P.S தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” எனும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மாநாடு படத்தில் பேமஸான ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் செம்ம மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…
vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….